உ.பி. மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பா.ஜ.க. வில் இருந்து இதுவரை 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர், இன்று ஒரே நாளில் மட்டும் 7 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

பா.ஜ.க. வில் இருந்து சமாஜ்வாதி கட்சிக்கு தாவியுள்ள சில எம்.எல்.ஏ.க்கள் புதிய கட்சியில் தங்களுக்கு சீட்டு வழங்கப்படுமா என்று காத்திருக்கின்றனர், ஏற்கனவே கடந்த ஐந்தாண்டுகளாக கட்சிக்காக உழைத்த சமாஜ்வாதி கட்சியினர் புதிதாக வந்திருக்கும் எம்.எல்.ஏ.க்களால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கட்சியில் இருந்து வெளியேறிய சில எம்.எல்.ஏ.க்கள் தனித்து போட்டியிடும் எண்ணத்திலும் உள்ளனர், அவ்வாறு தனித்துப் போட்டியிட்டால் அது யோகி ஆதித்யநாத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே சிறந்த முதல்வராகவும் பிரதமராகும் தகுதியுடையவர் என்றும் முன்னிலை படுத்தப்பட்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது இதுபோன்ற ஒரு நெருக்கடியை சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க. வில் இருந்து வெளியேறிய 15 எம்.எல்.ஏ.க்களின் விவரம் :

1. சுவாமி பிரசாத் மௌரியா
2. பகவதி சாகர்
3. ரோஷன்லால் வர்மா
4. வினய் ஷக்யா
5. அவதார் சிங் பதானா
6. தாரா சிங் சவுகான்
7. பிரிஜேஷ் பிரஜாபதி
8. முகேஷ் வர்மா
9. ராகேஷ் ரத்தோர்
10. ஜெய் சௌபே
11. மாதுரி வர்மா
12. ஆர். கே சர்மா
13. பாலா அவஸ்தி
14 தரம் சிங்
15 சவுத்ரி அமர் சிங்