சென்னை; 69பேர் உயிரிழப்புக்க காரணமாக இருந்த  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் திமுக முன்னாள் பிரமுகர் கண்ணுகுட்டி  உள்பட 2 பேருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த முறை கண்ணுகுட்டியின் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், இந்த முறை நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம்  குடித்த அந்த பகுதிகளைச் சேர்ந்த  69 பேர்  உயிரிழந்தனர்.  கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை தமிழ்நாடு அரசு அறிவித்து, இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்தது திமுக பிரமுகர் என்பதுதெரிய வந்தது. மேலும், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, காவல்துறை, கள்ளச்சாராய வியாபாரிகளை வேட்டையாடினர். இதுவரை 18 பேரை கைது செய்த காவல்துறை அவர்கள்மீது குண்டாஸ் சட்டத்தை போட்டது. ஆனால், அதை உயர்நீதி மன்றம் கடந்த வாரம் ரத்து செய்தது.

தற்போது இந்த வழக்கை  சி.பி.சிஐடி விசாரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள், தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி  சென்னைஉயர்நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்து வந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட  திமுகவைச் சேர்ந்த பிரமுகரான,  கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோர் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை  உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான தாமோதரன், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜூவுக்கு  நிபந்தனை ஜாமின் வழக்கி உத்தரவிட்டார். இருவருக்கும் ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  அதை ஏற்க மறுத்த நீதிபதி இருவருக்கும் ஜாமின் வழங்கினார்.

மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: திமுக பிரமுகர் கண்ணுகுட்டி உள்பட குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு

69பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டம் சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்கள் ஜாமின் கோரி வழக்கு! சிபிசிஐடி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

[youtube-feed feed=1]