சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களில் இரண்டு பேர் , தங்களுக்கு ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமனற்ங்ம, இதுகுறித்து, சிபிசிஐடி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த அந்த பகுதிகளைச் சேர்ந்த 69 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை தமிழ்நாடு அரசு அறிவித்து, இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்தது திமுக பிரமுகர் என்பதுதெரிய வந்தது. மேலும், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, காவல்துறை, கள்ளச்சாராய வியாபாரிகளை வேட்டையாடினர். இதுவரை 18 பேரை கைது செய்த காவல்துறை அவர்கள்மீது குண்டாஸ் சட்டத்தை போட்டது. ஆனால், அதை உயர்நீதி மன்றம் கடந்த வாரம் ரத்து செய்தது.
இந்த நிலையில், கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சின்னதுரை மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரும் ஜாமின் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய மனுதாரர் வழக்கறிஞர், கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து வைத்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்ய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு,. குண்டாஸ் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது என்று கூறியதுடன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளதால், மனுதாரர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் வாதிடப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதி, மனுவுக்கு வருகிற 23-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.