டெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய முதல் தேசிய செரோ சர்வேயில். நாடு முழுவதும் , கிராமங்களில் மொத்தம் 69.4% மக்கள் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக  தேசிய அளவிலான நோய்க்கிருமித் தொற்று ஆய்வு (செரோ சர்வே) நிறுவனம் சர்வே செய்து வருகிறது. ஏற்கனவே  நடத்திய சர்வே கடந்த மே 11ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதிவரை 70 மாவட்டங்களில் உள்ள 700 நோய்த் திரள் பகுதியில் 4 அடுக்குகளில் 30 ஆயிரத்து 283 வீடுகளில் , 28 ஆயிரம் தனிநபர்களின் ரத்த மாதிரிகளை கோவிட் கவாச் எலிஸா கிட் மூலம் பரிசோதித்தது.

இதில், நாடு முழுவதும் கிராமப்பகுதிகளில் 69.4%  பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக, அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.  கிராமப்பகுதிகளில் கடந்த மே மாதத் தொடக்கத்திலேயே பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில்  28 ஆயிரம் பேரில் 48.5% பேர் 18 வயது முதல் 45 வயதுள்ளவர்கள், 51.5% பேர் பெண்கள். 18.7%பேர் நோய் தொற்றுக்கு அதிகமான வாய்ப்புள்ள பகுதிகளில் பணியாற்றி வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

18 வயது முதல் 45 வயதுள்ளோரில் அதிகபட்சமாக 43.3 சதவீதம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

46 வயது முதல் 60 வயதுள்ளவர்கள் 39.5 சதவீதம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக 60வயதுக்கு மேற்பட்டோர் 17.2 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த ஆய்வு நடத்தப்பட்ட மாவட்டங்களை வகைப்படுத்தும்போது, 0.62 சதவீதம் முதல் 1.03 சதவீதம் வரை நோய் தொற்றின் தாக்கம் இருந்தது. அதாவது 15 மாவட்டங்களில் நோய்தொற்று இல்லை, 22 மாவட்டங்களில் குறைந்த அளவு தொற்று, 16 மாவட்டங்களில் நடுத்தரமாக நோய் தொற்று, 17 மாவட்டங்களில் அதிமாகன அளவில் பாதிக்கப்பட்டோர் இருந்தனர்.

கடந்த மே மாதம் நடுப்பகுதியில் இந்தியாவில் உள்ள வயதுவந்தோர் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஆட்படுவார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் இந்த ஆய்வில், 18-45 வயதுடையவர்களில் (43.3%) செரோபோசிட்டிவிட்டி மிக அதிகமாக இருந்தது, அதைத் தொடர்ந்து 46-60 வயதுக்குட்பட்டவர்கள் (39.5%) மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் (17.2%) மிகக் குறைந்த செரோபோசிட்டிவிட்டி கண்டறியப்பட்டது.
கிராமப்புறங்களில் செரோபோசிட்டிவிட்டி மிக அதிகமாக 69.4 சதவீதமாகவும், நகர்ப்புற சேரிகளில் இது 15.9 சதவீதமாகவும், நகர்ப்புற சேரிகளில் 14.6 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக கணக்கெடுப்பு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பாதிப்புகள் இல்லாத மாவட்டங்களில் கொரோனா செரோபோசிட்டிவிட்டி கண்டறியப்படுவது குறைந்த சோதனை மற்றும் சோதனை ஆய்வகங்கள் போதிய அளவு இல்லாததே காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட கிளஸ்டர்களில் நான்கில் ஒரு பங்கு (25.9 சதவீதம்) நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கெடுப்பு கூறுகிறது.