சென்னை
தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டுவரை இதன் தாக்கம் அதிகமாக இருந்து அதன்பிறகு உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. பிறகு கொரோனா பாதிப்பு பெரிய அளவில் காணப்படவில்லை. அதேபோல் உயிரிழப்புகளும் இல்லாமல் இருந்தது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. இந்தியா முழுவதும் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் அதிகபட்சமாக கேரளாவில் 95 பேர், தமிழகத்தில் 66 பேர், மகாராஷ்ட்ராவில் 56 பேர், கர்நாடகாவில் 13 பேர், புதுச்சேரியில் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் ,
”தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது; ஆனால், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் உள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம். காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள டாக்டரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம்”
என்று கூறியுள்ளனர்