தேசிய கல்விக்கொள்கை: 65ஆயிரம் பரிந்துரைகள்‌‌ குவிந்துள்ளதாக மக்களவையில் தகவல்

Must read

டில்லி:

த்திய அரசு அறிவித்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக இதுவரை 65ஆயிரம் பரிந்துரைகள்‌‌ குவிந்துள்ளதாக  மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், புதிய கல்விக்கொள் கையை அமல்படுத்த மத்தியஅரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது கருத்துக்கேட்பு கூட்டம் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக இதுவரை 65 ஆயிரம் பரிந்துரைகள்‌‌ வந்திருப்ப தாகதெரிவித்துள்ளார்.

கடந்த 15ஆ‌ம் தேதி வரை பொதுமக்கள் உள்ளிட்ட பல்‌வேறு தரப்பினரிடமிருந்து சுமார் 65 ஆயிரம் பரிந்துரைகள் மத்திய அரசு‌க்கு வந்துள்ளதாக‌க் கூறியுள்ளார். தமிழ் மொழியிலும் ஏராளமான பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றிருப்ப‌தாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தனி‌ நபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் உ‌ள்ளிட்ட வெவ்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கை களின் விளைவாக,‌ பரிந்துரைகளை அளிப்பதற்கான அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை தனது பதலி‌ல் அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சுட்‌டிக்காட்டியுள்ளார்.

More articles

Latest article