பாட்னா

பீகார் சட்டசபையில் 65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்று முன் தினம் இந்த கணக்கெடுப்பு விவரங்களை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டார். இந்த விவரங்களை வெளியிட்ட பிறகு நிதிஷ்குமார், “பீகாரில் தற்போது அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்படும்” என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 30%-ல் இருந்து 43% ஆகவும், பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு 13 % -ல் இருந்து 20 சதவிகிதம் ஆகவும் உயர்த்தப்படும் அதே வேளையில். பழங்குடியினர் இட ஒதுக்கீடு 2 சதவிகிதமாக நீடிக்கும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான(EWS) 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டு அளவு 75% ஆக உயரும் என்ற தகவலும் நிதிஷ்குமார் தன் உரையில் தெரிவித்தார்..

முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இட ஒதுக்கீட்டை 65 சதவிகிதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இன்று இட ஒதுக்கீடு உயர்வுக்கான மசோதா, இன்று பீகார் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.