மிஷன் இம்பாசிபல் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்.

61 வயதான இவர் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்.

கடைசியாக 2012ம் ஆண்டு தனது மூன்றாவது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர் கடந்த சில மாதங்களாக ரஷ்ய மாடல் அழகியுடன் நெருக்கமாக இருந்து வந்தார்.

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று லண்டனில் வசித்து வரும் எல்சினா கய்ரோவா என்ற 36 வயது ரஷ்ய மாடல் அழகியுடன் கடந்த டிசம்பர் மாதம் லண்டனில் உள்ள பிரபல உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் காதலர்களைப் போல் ஜோடி சேர்ந்து சுற்றிய இவர்கள் குறித்து செய்திகள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவிலும் இவர்களின் நெருக்கம் அதிகரித்ததை அடுத்து இவர்கள் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பிருப்பதாகப் பேசப்பட்டது.

இதுகுறித்து எதுவும் கூறாமல் இருந்த நிலையில் தற்போது எல்சினா கய்ரோவா-வுடனான தனது உறவை டாம் க்ரூஸ் உறுதிசெய்துள்ளார்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும் தொழிலதிபருமான ரினத் கய்ரோவா-வின் மகளான எல்சினா கய்ரோவா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.