சென்னையின் அடையாளமான உதயம் தியேட்டர் விரைவில் மூடப்படுகிறது.

1983ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகராட்சி எல்லையில் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்ட தியேட்டர் இந்த உதயம் தியேட்டர்.

உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று தியேட்டர்களுடன் மினி உதயம் என்ற மற்றொரு திரையும் சேர்ந்து கொண்டது.

தற்போது சென்னை பெருநகரின் மையப்பகுதியில் உள்ள முக்கிய லேண்ட்மார்க்குகளில் ஒன்றாக இருந்து வரும் உதயம் தியேட்டர் விரைவில் மூடப்பட உள்ளது.

இதயத்தை திருடாதே, நியாய தராசு, காசி, ஆளவந்தான், ரஜினி முருகன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட ஏராளமான வெள்ளிவிழா படங்கள் மட்டுமன்றி ரஜினி மற்றும் கமல் படங்களை ஒரேநேரத்தில் வெவ்வேறு திரைகளில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் 40 ஆண்டுகளாக நீங்காத இடம்பிடித்திருந்தது.

2.13 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் அலுவலக வளாகத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பைக் கட்ட திட்டமிடப்பட்டதை அடுத்து இந்த இடம் பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உதயம் தியேட்டரில் படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.