6வயது சிறுமி பாலியல் கொலை: கோவை கொலைகாரனுக்கு பொதுமக்கள் கும்மாங்குத்து…..

Must read

கோவை:

6வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளி, அரசு மருத்துவமனைக்கு போலீசாரால் அழைத்து வந்தபோது, பொதுமக்கள் அவன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி 6 வயது சிறுமி கொலை நெஞ்சை உலுக்கியது. கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பன்னிமைடை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 1ம் வகுப்பு படிக்கும்சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த கொடுமையை செய்ததாக, தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவனை போலீசார் கைது செய்தனர். அவனுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய, கோவை அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அவன் மருத்துவ மனைக்கு வந்ததை அறிந்த பொதுமக்கள் மருத்துவமனை வெளியே காத்திருந்தனர்.

பரிசோதனை முடிந்ததும், குற்றவாளி  சந்தோஷ் குமாரின் முகத்தை, லுங்கியால்  மறைத்து போலீசார் அழைத்துச்  வந்தனர். இதைக்கண்ட பொதுமக்கள் சிலர், அவனை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். அவனது முகத்தில் சிலர் குத்து விட்டனர்.

இதையடுத்து, அவனை பொதுமக்களின் தாக்குதலில் இருந்து மீட்ட காவல்துறையினர் உடனடி யாக வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More articles

Latest article