டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 6 திரிணாமூல் எம்.பி.,க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

பெகாசஸ் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் எதிர்க்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாராளுமன்ற இரு அவைகளும் முடககப்பட்டு வருகின்றன. இன்றும், மாநிலங்களவையில்  பெகாசஸ் உளவு விவகாரம்க குறித்து விவாதிக்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெங்கையா நாயுடு எச்சரிக்கையை மீறி அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது பேசிய வெங்கையா நாயுடு, அவையை முடக்கம் செய்யும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும், அந்த செயலில் ஈடுபடும் உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் எச்சரித்திருந்தார். இதன்பிறகும் பெகாசஸ் உளவு விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.