திருப்பதி

திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கட்டுகளை அதிக விலைக்கு விற்ற 6ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினசரி லட்சைக்கணக்கான திருப்பதி கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.  இதனால் இங்கு ஆர்ஜித சேவைகள் செய்ய கடும் கூட்டம் இருந்து வந்தது.  முன்கூட்டியே  இதற்குப் பதிவு செய்யப்படுவதால் பலரும் சேவை டிக்கட்டுகள் கிடைக்காமல் தவித்து வந்தனர்.  இதைப் பயன்படுத்தி பணம் பறிக்க சில தேவஸ்தான ஊழியர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி வெவ்வேறு போலி அடையாள் அட்டைகள் பயன்படுத்தி இந்த ஊழியர்கல் ஆர்ஜித சேவைக்கு முன்பதிவு செய்துள்ளனர்.  அந்த டிக்கட்டுகளை பக்தர்களுக்கு அதிக விலையில் வெற்றி ஏராளமான அளவில் பணம் சம்பாதித்துள்ளனர்.   கடந்த 2006 முதல் 2008 வரை இதுபோல தினசரி நடந்து வந்துள்ளது. விசாரனையில்  உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே தேவஸ்தானத்தில் பணி புரியும் கண்காணிப்பாளர்களான சூர்ய நாராயணா, சோடா மதுசூதனன், மூத்த உதவியாளர்கள் பாலகிருஷ்ணா, ஹேமாதர், மற்றும் இளநிலை உதவியாளர்கள் நாராயண ராஜு, சீனிவாசுலு ஆகிய 6 பேர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  தவிர மேலும் 4 ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.