சென்னை: தமிழ்நாட்டில், தற்போதைய நிலவரப்படி, சுமார்  6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக  தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டின் பெரும்பாலான பணிகளில் வடமாநிலத்தவர்களே பணியாற்றி வரும் நிலையில், வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தி, வட மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால், தொழில்தறை முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழநாடு அரசு வடமாநிலத் தொழிலாளர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறத.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக தனியே ஒரு வலைதளம் ((https:/labour.tn.gov.in/ism) உருவாக்கப்பட்டு, அவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வந்தது. அதன்படி சுமார் 6 லட்சம் இருப்பதாகதெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக தனியே ஒரு வலைதளம் (https:/labour.tn.gov.in/ism) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் இதுவரை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள், தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துறை அலுவலர்கள், வேலையளிப்போர் மூலமாகவும் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் சுயமாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.