லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் அடித்த புயல் காற்றால், பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்த நிலையில், 3 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில், இரவு நேர புயலின் போது கட்டுமானத்தில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் பெரும் சோகம் நிகழ்ந்தது. இதில் குறைந்தது ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் குரானா பகுதியில் பெட்வா நதியின் குறுக்கே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சம்பவத்தன்று (மே 28) நள்ளிரவு 2 மணியளவில், திடீரென கடுமையான சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இரவு நேரத்திலும் அந்த பாலத்தில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கனமழை காரணமாக, பணி செய்தவர்கள் அனைவரும் பாலத்திற்கு கீழே ஒதுங்கினர்.
இநத நிலையில், திடீரென பாலத்தின் கான்கிரீட் கட்டுமான பகுதி இடிந்து, அருகே இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் போலீசாரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த 6 பேரில் ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டன. 3 தொழிலாளர்கள் கான்கிரீட் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களை உயிருடன் மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து வருகின்றன.
[youtube-feed feed=1]