சென்னை: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் இளநிலை கலை அறிவியல் படிப்புகள் படிக்க எழுத வேண்டிய நுழைவு தேர்வான கியூட் நுழைவு தேர்வு தொடர்பான புதிய தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு 2026 (க்யூட்)’ தோ்வுக்கான புதிய தேதியை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வியாழக்கிழமை அறிவித்தது..
அதன்படி, கியூட் தோ்வு வரும் மே 31, ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது..
முன்னதாக, இந்ததோ்வு மே 28ந்தேதி நடைபெற இருந்த நிலையில், பக்ரீத் பண்டிகை காரணமாக மாற்றிவைக்கப்பட்டது. இதையடுத்த புதிய தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மே 31-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கி யூட் தோ்வில் பங்கேற்கும் தோ்வா்களுக்கான தோ்வறை நுழைவுச் சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
cuet.nta.nic.in/ என்ற அதிகாரபூா்வ வலைதளத்திலிருந்து தோ்வறை நுழைவுச் சீட்டை தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..ஜூன் 6, 7-ஆம் தேதி களில் நடைபெறும் க்யூட் தோ்வில் பங்கேற்பவா்களுக்கான தோ்வறை நுழைவுச் சீட்டு விரைவில் வெளியிடப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது
