சென்னை; அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மிழகத்தில் கொரோனா பாதிப்பு 99 சதவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. கடந்த மாதம் சென்னை ஐஐடி மாணவர்கள் பலருக்கு தொற்று உறுதியான நிலையில், அவர்களும் குணமடைந்தனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 331 பேர் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். இதுவரை 34,16,569 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு தங்கியிருந்து படித்து வரும் மாணவர்கள் சிலருக்கு சளி காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த 40 மாணவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த 6 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]