சென்னை
தெற்கு ரயில்வே பயணிகள் வசதிக்காக ஒரு சில ரயில்களில் கூடுதல் பெட்டிக்ள் இணைக்க உள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
:பயணிகள் வசத்க்காக பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்:
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண்: 22681) புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவில்லா பெட்டி ஆகிய 6 பெட்டிகள் இன்று(மார்ச் 1) முதல் ஜூன் மாதம் 18 ஆம் தேதி வரை தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு (வண்டி எண்: 22682) வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரெயிலிலும் இன்று முதல் 19 ஜூலை வரை அதே 6 பெட்டிகள் இணைக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு (வண்டி எண்: 22657) திங்கள், புதன், ஞாயிறு ஆகிய தினங்களில் இயக்கப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவில்லா பெட்டி ஆகிய 6 பெட்டிகள் மார்ச் 2 முதல் ஜூன் மாதம் 16 ஆம் தேதி வரை தற்காலிகமாக இணைக்கப்பட்டுகிறது.
அதே சமயம் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு (வண்டி எண்: 22658) திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரெயிலிலும் மார்ச் 3 முதல் 17 ஜூலை வரை அதேபோல் 6 பெட்டிகள் இணைக்கப்பட்டும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.