சர்வதேச பேட்மின்டன் – 5வது சாம்பியன் பட்டம் வென்றார் லக்சயா சென்!

Must read

டாக்கா: வங்கதேசத்தில் நடைபெற்ற சர்வதேச சேலஞ்சர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் இந்தியாவின் லக்சயா சென்.

இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், மலேசியாவின் லியோங் ஜூன் ஹாவ்வுடன் மோதினார். இந்தக் கடுமையான போட்டி சுமார் 50 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதில் லக்சயா சென் 22-20 மற்றும் 21-18 ஆகிய நேர் செட் கணக்குகளில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த சீசனில் மட்டும் இவர் கைப்பற்றும் ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும் இது.

ஏற்கனவே பெல்ஜியம் ஓபன், நெதர்லாந்து ஓபன், சார்லார்லக்ஸ் ஓபன், ஸ்காட்லாந்து ஊபன் ஆகியவற்றில் சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தார் லக்சயா சென்.

வங்கதேசத்தில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இந்த ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்திருப்பதாகவும், தனது இந்த ஃபார்ம் அடுத்த ஆண்டிலும் தொடரும் எனவும் கூறியுள்ளார் லக்சயா சென்.

More articles

Latest article