டில்லி

போரால் சூழப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்டும் வரும் 5 ஆம் விமானம் டில்லிக்கு வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக ரஷ்யப்படைகள் உக்ரைன் நாட்டின் எல்லையில் நிறுத்தப்பட்டதால் கடும் பதட்டம் ஏற்பட்டது.   ரஷ்யப்படைகள் உக்ரைன் மீது தற்போது கடும் போரில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.   உக்ரைனில் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டவர்கள் தங்கி உள்ளதால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முற்பட்டனர்.

ஆனால் ரஷ்ய விமானப்படைகளால் உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் அழிக்கப்பட்டுள்ளன.  இதையொட்டி இந்திய அரசு அண்டை நாடுகளான பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்களை வரவழைத்து அக்கிருந்து விமானம் மூலம் நமது நாட்டுக்கு அழைத்து வருகிறது.    இதனால் இந்தியர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே 4 விமானங்கள் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வந்துள்ளது.  தற்போது டில்லிக்கு உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் 5 ஆம் விமானம் வந்து சேர்ந்துள்ளது.   இதுவரை உக்ரைனில் இருந்து 1156  இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகத்துக்குத் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.