இந்திய பயனர்களிடம் இருந்து புகார் எழுந்ததை அடுத்து பாலியல் மற்றும் தீவிரவாதம் தொடர்பான பதிவுகளை வெளியிட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் ட்விட்டர் நிறுவனம் கணக்கு முடக்கம் தொடர்பான அறிக்கையை வெளியிடுகிறது.

அந்தவகையில் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 25 வரையிலான ஒரு மாதத்தில் பாலியல் மற்றும் நிர்வாண படங்கள் பதிவிட்டது தொடர்பாக 52,141 இந்திய பயனர்களின் கணக்குகளும்.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பதிவுகளை போட்டதற்காக 1,982 பயனர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து இந்திய பயனர்களிடம் உரிய விளக்கம் பெற்று அவற்றை நிரந்தரமாக முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.