ஜகார்த்தா:
ந்தோனேசியச் சுதந்திர தினத்தன்று பயங்கரவாத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டதாகச் சந்தேகத்தின் பேரில் 53 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஆர்கோ யுவோனோ தெரிவிக்கையில், டென்ஸஸ் 88 என்று அழைக்கப்படும் அந்த தீவிரவாதிகள் 53 பேரில் 50 தடை செய்யப்பட்ட ஜெமா இஸ்லாமியா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள 3 பேர் ஜே.ஏ.டி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இவர்கள் ஆகஸ்ட் 12 முதல் 17-ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் கைது செய்யப்பட்டவர்கள் என்றும், இதில் எட்டு தீவிரவாதிகள் வடக்கு சுமத்ராவிலும், ஜம்பில் மூன்று பேரும், மேற்கு கலிமந்தன் மற்றும் மாலுகுவில் தலா ஒருவரும் கிழக்கு மற்றும் தெற்கு சுலாவேசி மாகாணங்களில் தலா மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் கூறினார்.