10 நாட்கள் ஊரடங்கு அமல் – இலங்கை அரசு அறிவிப்பு

Must read

கொழும்பு:
10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.


இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி தளபதி சவேந்திர சில்வா தெரிவிக்கையில், இலங்கையில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் 10 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு கடந்த 19-ஆம் தேதி இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும், வெள்ளிக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 30 அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.  இருப்பினும், விவசாயம், ஆடை, கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தடுப்பூசி மையங்கள் திறந்திருக்கும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சில்வா கூறினார்.

இந்த 10 நாட்களில் மொபைல் குழுக்கள் செயல்படும், இந்த வயதினரிடையே வைரசால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இருந்ததால், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று சில்வா கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 3,77,973 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இலங்கையில் வேகமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More articles

Latest article