சென்னை: தமிழகத்திற்கு இன்று மாலை மேலும் தடுப்பூசிகள் வருவதால், 45வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடரும் என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன், சென்னை ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில்,கருப்பு பூஞ்சை சோதனை மையத்தை இன்று  திறந்து வைத்தார். பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, . தமிழகத்தில் இதுவரை 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த் நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அனைத்து பரிசோதனைகளையும், ஒரே இடத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், கருப்பு பூஞ்சை குறித்து ஆராய 13 வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்திற்கு இன்று  4.20  லட்சம் தடுப்பூசிகள்  வருவதால், நாளை முதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும்.  45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றவர், தடுப்பூசி இன்று மாலை வந்தவுடன், மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும், அதறக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது எற்றார்.

தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.