டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி யு யு லலித் மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மூத்த நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் (Dhananjaya Yeshwant Chandrachud) பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இவர் நாட்டின் 50வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார்.

உச்சநீதிமன்றத்தின் மு  தலைமை நீதிபதி யு.யு.லலித் நவம்பர் 8ந்தேதியுடன் ஓய்வுபெறுகிறார்.  இதையடுத்து, அடுத்த தலைமைநீதிபதி யார் என்பது குறித்து பரிந்துரைக்கும்படி மத்தியஅரசு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதியிருந்தது. அதன்படி, இன்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சக நீதிபதிகளின் கருத்தை  இன்று காலை 10.15மணிக்கு ஓய்வறையில் கூடி தெரிவிக்கும்படி கடிதம் எழுதியிருந்தார்.

அதைத்தொடர்ந்து,  தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை, தனது  வாரிசாக நியமித்தார். நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இவரது பதவி உயர்வுக்கு மத்திய சட்டவாரியம் ஒப்புதல் வழங்கி, குடியரசு தலைவரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். அதை ஆய்வு செய்து குடியரசு தலைவர் கையொப்பம் இட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார். அதைத்தொடர்ந்து நவம்பர் 9ந்தேதி அன்று டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார்.

உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் சந்திரசூட் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நவம்பர் 9, 2022 அன்று இந்தியாவின் தலைமை நீதிபதியாகி, நவம்பர் 10, 2024 வரை பதவியில் தொடர்ந்த பிறகு, உச்ச நீதிமன்றத்தின்  அடுத்த 7 நீதிபதிகள் (நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உட்பட) பணியில் இருந்து ஓய்வு பெறுவார்கள். 2024ல் நீதிபதி சஞ்சீவ் கண்ணா (இப்போது எண்.10) மட்டுமே தலைமை நீதிபதியாக முடியும்.

தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா இந்தியா தனது முதல் பெண் தலைமை நீதிபதியாக செப்டம்பர் 24, 2027 அன்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், அக்டோபர் 29, 2027 அன்று ஓய்வு பெற்ற பிறகு, நீதிபதி பமிடிகண்டம் ஸ்ரீ நரசிம்ஹா மே 2, 2028 வரை தலைமை நீதிபதியாக இருப்பார். அதன்பிறகு, நீதிபதி ஜே.பி. பார்திவாலா தலைமை நீதிபதியாக . ஆகஸ்ட் 11, 2030 வரை இருப்பார்.

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமைநீதிபதி குறித்து மத்தியஅரசு தலைமை நீதிபதிக்கு கடிதம்!