சென்னை

ரு வாரத்தில் 500  டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 5,329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் 500 கடைகள் மூடப்படும் என சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.  எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மண்டல மேலாளர்கள் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை கடைகள் மூடப்பட உள்ளன? அவை எந்தெந்த கடைகள் என்ற பட்டியல் பெறப்பட்டு உள்ளது. விரைவில் மூடப்பட உள்ள 500 மதுக்கடைகள் குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

“இது தொடர்பாக ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இது குறித்து  விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.”

எனத் தெரிவித்துள்ளார்.