நெட்டிசன்:
ஜி.எஸ். தயாளன் ( Gs Dhayalan) அவர்களது முகநூல் பதிவு:
நான் வீட்டு உபயோகப் பொருட்களின் மாவட்ட விற்பனையாளர். இதுவரை எனது டீலர்களிடமிருந்து ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட வரவில்லை. அனைத்தும் 500, 1000 மட்டுமே. வாங்கவில்லை என்றால் Collection இல்லை. முன்பு வரவாகிக்கொண்டிருந்த 100 ரூபாயும் 9 ம் தேதியிலிருந்து வருவதில்லை.
0
இந்நிலையில் ஒரு நிறுவனத்திற்கு கொடுத்திருந்த காசோலைக்கு தேவையான மீதி பணம் செலுத்த இன்று வங்கிக்கு எனது பிரதிநிதி சென்ற போது Current account ல் 500, 1000 நோட்டுக்களை வாங்க இயலாது என I.O.B தக்கலை கிளை மேலாளர் தெரிவித்துள்ளார். நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , காசோலைக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது, மிக அவசரம், கடைசி முறையாகப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கோரினேன். மேலும் வருமான வரித்துறைக்கு பதிலளிக்கும் ஆவணங்கள் என்னிடம் உள்ளன என்றும் தெரிவித்தேன்.
அவர் ” நான் வாங்கினால் எனக்கு அபராதமும் ஆறுமாத சிறைத்தண்டனையும் கிடைக்கும் என்பதால் முடியாது” எனக் கூறி விட்டார். பணம் வாங்க இயலாதெனில் எழுதி தாருங்கள் எனக் கேட்டேன். Pay-in-slip ல் எழுதி கொடுத்துள்ளார்.
காசோலை ரிட்டர்ன் ஆகிவிட்டது. நான் காசோலை கொடுத்திருந்த ‘ வீடியோகான் ‘ நிறுவன விதிப்படி இதுவரை ஒவ்வொரு கொள்முதலுக்கும் வழங்கி வந்த 21 நாள் கடன் அவகாசம் எனக்கு நிறுத்தப்படுகிறது அபராதத்துடன்…
நன்றி