டெல்லி:
ருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு புதிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மருத்துவ படிப்பிற்காக தமிழகத்தால் மத்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங் களில் 50 சதவீதம் தமிழக ஓ.பி.சி. மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக, அதிமுக உள்பட அனைத்துக்கட்சிகளும் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.  மேலும்,  மருத்துவ மேற்படிப்புக்களில் அகில இந்திய ஓபிசி  பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மூன்று மாதத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்தியஅரசு சார்பில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதால், திமுக சார்பில் உடனே உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில்,  உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு  விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.