பாஜகவுக்கு தாவ தயாராகும் சென்னை திமுக எம்எல்ஏ… அறிவாலயத்தில் பரபரப்பு

Must read

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், திமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

திமுக எம்எல்ஏ அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில் ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வமும்  இருந்து வந்த நிலையில், திமுக தலைமை நே.சிற்றரசு என்வரை மேற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்தது.  அவர் வகித்து வந்த இளைஞர் அணி செயலாளர் பதவி, அன்பழகனின் மகனுக்கு தாரை வார்க்கப்பட்டது.

இதனால் கடும் மன உளைச்சலில்இருந்த கு.க.செல்வம், திமுக நடவடிக்கைகைளில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில், விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் திமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் வி.பி. துரைசாமி விலகி பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் மேலும் ஒரு முக்கியப்புள்ளி  பாஜகவுக்கு செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் சல சலப்பை ஏற்பட்டுள்ளது.

திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ள அங்கு   பாஜக தலைவர் ஜே.பி.  நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து,  அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

More articles

Latest article