சென்னை:

மிழகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்,”தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக இங்கே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. அரியலூரில் சிகிச்சை பெறும் பெண் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் வேலை பார்த்தவர். டெல்லி மாநாடு சென்று வந்தவர்களில் இன்று மாலை 50 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு உடனே செல்லுங்கள். டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற 1131 பேரில் 523 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.” என கூறினார்.

இன்று காலை 7 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி ஆன நிலையில், இப்போது மேலும் 50 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.