திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள தீப மலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆன்மிக நகரம் திருவண்ணாமலை.

கார்த்திகை தீபத்தன்று இங்குள்ள தீபமலையில் அண்ணாமலை தீபம் ஏற்றுவது வழக்கமாகும்.

இந்தமலையின் இன்று திடீர் தீ விபத்து  ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டது.

தீயணைப்புப் படையினரும் பொதுமக்களும் இணைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தால் மலையில் உள்ள ஏராளமான மரங்களும் மூலிகைச் செடிகளும் எரிந்து பாழாகி உள்ளன.

விபத்துக்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வரவில்லை