சென்னை: கோவையில் நடைபெற்ற ஈஷா யோக மைய சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலாகி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் டெல்லி நிஜாமுதின் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடியதே கொரோனா பரவல் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

இதே போன்று, கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ஈஷா யோகா மையத்தில் ஏராளமான வெளிநாட்டவர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் மூலம் கொரோனா பரவுமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், முழுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு ஆய்வு நடத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.