துறைமுகப் பணியாளர்களுக்கு 50 லட்சம் கொரோனா இழப்பீடு – கப்பல் போக்குவரத்து அமைச்சகம்…

Must read

டெல்லி

அனைத்து துறைமுகப் பணியாளர்களுக்கும் கொரோனா இழப்பீடாக 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகிவரும் நிலையில், மருத்துவம், காவல் உள்ளிட்ட மக்கள் பணியாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் இழப்பீடு நிவாரணம் அறிவித்து வருகின்றன. தற்போது துறைமுகப் பணியாளர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.

நாட்டில் உள்ள துறைமுகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா இழப்பீடு 50 லட்சம் வழங்கப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இக்காப்பீட்டுத் திட்டம் செப்டம்பர் மாதம் 30 வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

More articles

Latest article