5 ஆண்டுகளில் 16 லட்சம் புதிய குடும்ப அட்டை : தமிழக அரசு  தகவல்

Must read

 
சென்னை:
டந்த 5 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
சென்னை எழிலகத்தில் இன்று  உணவு மற்றும்  நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர்  காமராஜ் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆலோசனை
                                                            அமைச்சர் தலைமையில் ஆலோசனை

இதுபற்றி அமைச்சர் காமராஜ்: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ், சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி மற்றும் மானிய விலையில் சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள் போன்றவை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தற்போது உபயோகப்படுத்தி வரும் குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டு அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில்  சுமார் 16 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
ஒவ்வொரு சனிக்கிழமையும்  குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெறுவதாகவும், இதன்மூலம் 5 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு,  தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

More articles

Latest article