சென்னை:

மிழகத்தில் ஒருங்கிணைந்த 5வருட சட்டப்படிப்புக்ககான கலந்தாய்வு வரும் 8ந்தேதி தொடங்கு வதாக அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரும்  ஒருங்கிணைந்த பி.ஏ.,எல்.எல்.பி. என்ற 5ஆண்டு  இளநிலை சட்டப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 8-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.பி.எல் பட்டப்படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கு ஜூன் முதல் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வநதது. வி‌ண்ண‌ப்‌பி‌க்கு‌ம் தே‌தி கடந்த மாதம் (ஜூன்)  25ம் தே‌தியுடன் முடிவடைந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள 10 அரசு சட்டக் கல்லூரிகள், ஒரு தனியார் கல்லூரியில் இடம்பெற்றிருக்கும் 1,411 ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான  கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பித்தவர்களுக்கான தர வரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில்,  கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 16-ந்தேதி  நடத்தப்பட உள்ளது.

இதற்கான கட்-ஆஃப் மதிப்பெண், தேதி உள்ளிட்ட விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.