டில்லி:

மத்திய அரசு கடந்த ஜூலை முதல் ஜிஎஸ்டி.யை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் தவிர அனைத்து பொருட்களும் இதன் கீழ் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்கப்படும் குளிர்பானம் மற்றும் உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் என ஜி.எஸ்.டி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ரெயில்களில் விற்கப்படும் அனைத்து உணவு பொருட்களுக்கும் ஒரே அளவில் ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கவுன்சில் தெரிவித்துள்ளது.