இன்று தமிழகத்தில் 5 அரசு அதிகாரிகள் இடமாற்றம்

Must read

சென்னை

மிழகத்தில் இன்று 5 அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது.  திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.   அதன் பிறகு பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   இறையன்பு ஐ ஏ எஸ் தலைமை செயலராகப் பொறுப்பு ஏற்றுள்ளார்.

இன்று தமிழக அரசு 5 அரசு அதிகாரிகளை  இடமாற்றம் செய்துள்ளது.

  1. தமிழக தொழிற்சாலைகள் முன்னேற்றக் கழக நிர்வாக இயக்குநர் அனீஷ் சேகர் மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  2. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை இணைச் செயலர் கார்மேகம் ஐ ஏ எஸ் சேலம் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யபட்டுள்ளார்.
  3. தமிழக மாநில ஆணையர் பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் கடலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
  4. தமிழக தொழிற்சாலைகள் கூடுதல் ஆணையர் சிவராசு ஐ ஏ எஸ் திருச்சி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
  5. திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

More articles

Latest article