’நீங்கள் இல்லாமல் நான் இல்லை’, ரஜினி வெளியிட்ட ஹேஷ் டேக் டிரெண்டிங்,.. திரையுலகில் 45 வருட நிறைவு..

Must read

கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘அபூர்வா ராகங்கள்’ படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமா னார் 1975 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரை வாழ்வில் தனது 45 ஆண்டு நிறைவு செய்கிறார் ரஜினி. அதைக்குறிக்கும்  வகையில் சிறப்பு ஹேஷ்டேக் #45YearsOfRajinismCDP வெளியாகி உள்ளது. மோகன்லால், சுனில் ஷெட்டி, சவுந்தர்யா ரஜினி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அட்லீ, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ராகவா லாரன்ஸ்  இதனை வெளியிட்டுள்ளனர்


ரசிகர்கள் தனது 45ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினி ஒரு டிவிட்டர் மெசேஜ் வெளிட் டுள்ளார். அதில் அவர் கூறிருப்பதாவது:
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில் என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்க ளுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றி’ என்று தெரிவித்திருக்கிறார்.


’நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என்ற ஹேஷ் டேக்கும் ரஜினி வெளியிட்டிருகிறார். இது டிரெண்டிங் ஆகி உள்ளது,

More articles

Latest article