விஜய் சேதுபதி ஜோடியாகும் தனுஷ் நாயகி..

Must read

விஜய் சேதுபதி ஜோடியாகும் தனுஷ் நாயகி..

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை, திரைப்படமாவது தெரிந்த தகவல்.

முரளிதரனாக ,விஜய் சேதுபதி நடிக்கிறார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்துக்குத் தற்காலிகமாக’ 800’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் முத்தையா முரளிதரன் மனைவி மதிமலர் வேடத்தில் நடிக்க, மலையாள நடிகை ரஜிஷா விஜயனை படக்குழு அணுகி உள்ளது.

ரஜிஷா, இப்போது மாரி செல்வராஜ் இயக்க தனுஷ் , கதாநாயகனாக நடிக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.

மதிமலர் வேடத்துக்கு முதலில் வேறு ஒரு பிரபல நடிகையுடன் படக்குழுவினர் பேச்சு நடத்தி இருந்தனர். ஆனால், கர்ணன் படத்தில் ரஜிஷாவின் அபார நடிப்பாற்றல் குறித்துத் தெரிய வந்ததால், அவரை மதிமலர் கேரக்டரில் நடிக்க அணுகி இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

-பா.பாரதி.

More articles

Latest article