சென்னை:

மிழகத்தில் 45 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்குவதாக தமிழக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி  தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை மறுநாள்  (14ந்தேதி) முதல்  மே 29 ஆம்  தேதி வரை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மீன்கள் இனப்பெருக்க காலமாக அறியப்படும் காலமான  ஏப்ரல், மே மாதம் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க ஆண்டுதோறும் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 14ந்தேதி நள்ளிரவு  முதல் மே 29ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட் டுஉள்ளது.

இந்த நாட்களில், சென்னை முதல் கன்னியாகுமாரி வரை மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

கடந்த மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 45 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.