ஓசூர்:

பிரதம மந்திரியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பெங்களூரை சேர்ந்த பிரபல நிறுவனமான ஜிஎம்ஆர் குழுமம் ஓசூர் பகுதியில் விமானம்-  ராணுவ தளவாட மையத்தை   அமைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

தமிழ்­நாடு தொழில் மேம்­பாட்டு கழ­கத்­து­டன் இணைந்து  ஜிஎம்ஆர் நிறுவனம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பெக்களூரை தலைமையிடமாக கொண்டுள்ள ஜிஎம்ஆர் என்ற நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்கள், ஆற்றல்; போக்குவரத்து; நகர உள்கட்டமைப்பு; ஃபவுண்டேஷன் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,  கிருஷ்­ண­கிரி மாவட்­டம், ஓசூ­ரில், விமா­னம் மற்­றும் ராணுவ தள­வா­டங்­கள் தயா­ரிப்பு மையத்தை அமைக்க இருப்பதாக கூறி உள்ளது.

இதுகுறித்து ஜிஎம்ஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

மத்­திய அரசு, ஏற்கனவே ஓசூர் – சென்னை இடையே, ராணுவ தொழில் உற்­பத்தி பாதை அமைக்­கப்­படும் என அறிவித்தபடி,  ‘மேக் இன் இந்­தியா’ திட்­டத்­தில் ராணுவ தளவாட உற்பத்தி மையத்தை அமைக்கப்படுகிறது.

தமிழ்­நாடு தொழில் மேம்­பாட்டு கழ­கத்­து­டன் ஜிஎம்ஆர் நிறுவனமும் இணைந்து  ஓசூ­ரில், விமான சாத­னங்­கள் மற்­றும் ராணுவ தள­வா­டங்­கள் தயா­ரிக்­கும் தொழில் மையத்தை, அமைக்க உள்­ளோம். இங்கு, உட­ன­டி­யாக தொழில் துவங்க வச­தி­யாக, 600 ஏக்­கர் நிலம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­நாடு மற்­றும் சர்­வ­தேச நிறு­வ­னங்­கள், இங்கு தொழிற்­சா­லை­கள் அமைப்­ப­தற்­கான கட்­ட­மைப்பு வச­தி­கள், செய்து தரப்­படும்.  இந்திய பாது­காப்பு துறைக்கு விமா­னங்­கள், ஹெலி­காப்­டர்­கள் உள்­ளிட்­ட­வற்றை தயா­ரிக்­கும் இந்­துஸ்­தான் ஏரோ­நாட்­டிக்ஸ் போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­ற­தாக, இந்த மையம் விளங்­கும். இதன் மூலம், இப்­ப­குதி குறிப்­பி­டத்­தக்க வகை­யில் வளர்ச்சி அடை­யும்.

இவ்­வாறு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.