சென்னை: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 14,138 பாசனக் குளங்களில் 4,433 பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன என நீர்வளத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நீா்வளத்துறை பராமாிப்பில்  38 மாவட்டங்களில் மொத்தம் 14 ஆயிரத்து 138 பாசனக் குளங்கள் உள்ளது. இந்த குளங்கள்  மழை காலங்களில் பெய்யும் மழை மற்றும் காட்டாற்று தண்ணீர் காரணமாக நிரம்பி வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள குளங்கள் காவிரி தண்ணீர் மூலமும், மதுரை மாவட்டத்தில் உள்ள பல குளங்கள், முல்லை பெரியாறு, வைகை அணை போன்றவற்றை சார்ந்தே உள்ளன.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைகாரணமாக, பல இடங்களில் நல்ல மழை பெய்ததால் பெரும்பாலான குளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வந்த மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் போன்ற ஏரிகளும் முழு கொள்ளவதை எட்டியது. இதனால், உபரி நீர் கால்வாய்களில் இருந்து திறந்து விடப்பட்டது. இதனால், 2023ம் ஆண்டு விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இநத் நிலையில்,  தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 14,138 பாசனக் குளங்களில் 4,433 பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.   அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 பாசானக் குளங்களில் 830 குளங்கள் நிரம்பியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 641 பாசனக் குளங்களில் 403 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது.

 கடலூர் 61 ராணிப்பேட்டை 219, சிவகங்கை 209, தென்காசி 209 புதுக்கோட்டை 174, திருவண்ணமலை 403, புதுக்கோட்டை 174, விழுப்புரம் 139, கள்ளக்குறிச்சி 125, விருதுநகர் 80. நெல்லை 79, தேனி 66 குளங்கள் நிரம்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 425 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 % நீர் நிரம்பியுள்ளது. திருவள்ளூர் 306 குளங்களும், காஞ்சிபிரம் மாவட்டத்தல் 281 குளங்களும் நிரம்பி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பல பகுதிகளில் உள்ள குளங்கள், குட்டைகள் நிரம்பி உள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.