திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மேலும் 43 பேருக்கு கொரோனா…

Must read

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (11/5/2020) ஒரே நாளில் மேலும்  43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில்  669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதுடன் மொத்த  எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மாநிலத்திலேயே சென்னையில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இங்கு இதுவரை 3,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புக்கு கோயம்பேடு மார்க்கெட் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூரில் ஏற்கனவே 337 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திருவள்ளூரில் 32 பேர், மீஞ்சூரில் 6 பேர், பூந்தமல்லியில் 4 பேர்  உள்பட மொத்தம் 43 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 380ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில் கொரோனா பரவலுக்கு காரணம் கோயம்பேடு மார்க்கெட்தான் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

More articles

Latest article