மே.வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

இன்னும் மூன்று மாதங்களில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கும்பல் கும்பலாக எம்.எல்.ஏ.க்கள் விலகி, பா.ஜ.க..வில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்த பா.ஜ.க. எம்.பி. அர்ஜுன் சிங் “சீட்டுக்கட்டு சரிவது போல், திரினாமூல் காங்கிரஸ் சரியப்போகிறது. ஜனவரி மாதம் அந்த கட்சிக்கு சட்டசிக்கல் உருவாகும்” என பூடகமாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று பேட்டி அளித்த பா.ஜ.க. பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா “திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 41 எம்.எல்.ஏ.க்கள் விலகி பாரதிய ஜனதாவில் சேர தயாராக உள்ளனர்” என தெரிவித்தார்.

“அந்த உறுப்பினர்களின் பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது. அவர்களில் யாரை சேர்ப்பது? யாரை சேர்க்கக்கூடாது? என பா.ஜ.க. ஆய்ந்து வருகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

– பா. பாரதி