சென்னை: மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள பிரதமரின் சூரியவீடு (Solar Panel) திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து உள்ளது.

பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில்,  சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து,  நாடு முழுவதுதும் முதற்கட்டமாக 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி பிப்ரவரி 15, 2024 அன்று தொடங்கி வைத்தார்.  அதன்படி, ரூ.75 ஆயிரம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, பயனர்கள்  தங்கள் வீட்டு மாடியில், மத்தியஅரசின் மானியத்துடன்  சூரிய மின்சக்தி தகடுகளை நிறுவி அதன்மூலம் மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் தயாரிக்கலாம். இதனால் மின் கட்டணம் கட்டுவது தவிர்க்கப்படும். இந்த திட்டத்துக்கு பிரதம மந்திரி சூர்யா கார் யோஜனா என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து,  சூரியசக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற பசுமை எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்ய மாநில அரசுகளை, மத்தியஅரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் இத்திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின்கீழ், அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு சூரியசக்தி மின்இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், இதுவரை40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால்,  அவர்களில்  5 சதவீதம்பேருக்கு மட்டுமே சூரியசக்தி மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கூறிய மின்வாரிய அதிகாரிகள், சூரியசக்தி மின்உற்பத்திக்கான சோலார் தகடுகள் (பேனல்) விற்பனை செய்யும் 100-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் சென்னை, கோவையில் மட்டுமே உள்ளனர். இதனால், பிற மாவட்டங்களில் இணைப்பு வழங்கு வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் சோலார் தகடு விற்பனை செய்யும் விநியோகஸ் தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இத்திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குள் மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் சூரியசக்தி மின்இணைப்புகள் வழங்கும் பணியில் தமிழகத்தில் சுணக்கம் ஏற்பட்டது’’ என்று தெரிவித்துள்ளனர்.

2மாதத்தில் 35000 விண்ணப்பம்: வீடுகளுக்கு சூரியசக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு…