சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அடுத்த 5 நாட்கள் வெப்ப அலை வீசும், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிருங்கள் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

இ,ந்த கோடை வெயில் தொடக்கம் முதலே மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இன்னும்  அக்னி நட்சத்திரம் தொடங்காத நிலையில்,  கொளுத்தும் வெயிலால் பலர் வெளியே தலைகாட்ட முடியாத  அளவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். காலை 5.30 மணி முதல் இரவு 6.00 மணி வரை  வெயிலின் தாக்க இருந்து வருகிறது.  மாநிலத்தில் பல பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதால் பகலில் பொதுமக்கள்  வெளியே செல்வது கடினமாக உள்ளது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகமாக இருக்கக் கூடும் என எச்சரித்து உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகமாக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  கோடை வெயில் கொளுத்தினாலும், தென் தமிழகத் தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,  தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 22) முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் .

மேலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22.04.2024 முதல் 26.04.2024 வரை அதிகபட்ச வெப்பநிலையாக தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 23° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39-41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

22.04.2024 முதல் 26.04.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85% ஆகவும் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

tamilrain_fc 23-04-24