சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில், கெமிக்கல் வைத்து பழுக்க வைத்த 4டன் மாம்பழங்கள், 4டன் வாழைப்பழங்கள்  பறிமுதல் செய்த  உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள், வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும்,  மாம்பழங்களில் கருப்பு போன்று படிந்து இருக்கும் பழங்களை தயவுசெய்து வாங்காதீர்கள்.இயற்கையாக பழுக்க வைக்கும் பழங்களில் வாசனை நன்றாக இருக்கும். ஆனால் கற்கள் கொண்டு பழுக்க வைக்கும் பழங்களில் வாசம் இருக்காது, ஆனால் பழம் மஞ்சள் நிறங்களில்  கண்ணை கவரும் வகையில் காணப்படம் என்றும் எச்சரித்தனர்.

தமிழ்நாட்டில்  மாம்பழ சீசன் தொடங்கி உள்ள நிலையில்,  மாநிலம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் மாங்காய்கள் கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இதுபோன்ற பழங்களை சாப்பிடுபவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இன்று காலை 6 மணி முதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்குள்ள நூற்றுக்கணக்கான கடைகளில் தொடர் சோதனை நடத்தினார்.  அப்போது, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள், மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெமிக்கல் மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட நான்கு டன் மாம்பழங்கள், நான்கு டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையை சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் கோயம்பேடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர்  நடத்தினர்.  இந்த சோதனையில் பல கடைகளில்  உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சுமார்  4டன் மாம்பழம் மற்றும் 3டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல் பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அதிகாரி, கோயம்பேட்டில் காலை நான்கு மணி முதலே ஆய்வு நடத்தி வந்துள்ளோம் . தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் மாம்பழத்தை கற்கள் கொண்டு பழுக்க வைக்கும் முறை சிலரால் நடத்தப்பட்டு வருகிறது சிலர் செய்யும் தவறால் மாம்பழ தொழிலே பாதிக்கப்படுகிறது. நாங்கள் இது குறித்து நிறைய அறிவுரைகளை கொடுத்திருக்கிறோம்.

இன்று மார்க்கெட்டின் ஒரு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டதிலேயே நான்கு டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மாம்பழங்கள் அனைத்தும் கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த பழங்களை நாம் சாப்பிடவே கூடாது. சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் கேடு. வாழைப்பழங்களும் நான்கு டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இது போன்ற பழங்களை  பொதுமக்களுக்கு தயவு செய்து வழங்க வேண்டாம் என வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், பொதுமக்களும் இதுபோனற் பழங்களை வாங்கி உண்ணாதீர்கள் என்று கூறினார்.

மேலும்,  கடைகளில் இது போன்ற பழங்கள்தான் மலிவு விலைக்கு வாங்கி சென்று ஜூஸ் போட பயன்படுத்தப்படுகிறது . இதனால் ஜூஸ் குடிக்க செல்லும் போது நீங்களே கடையில் உள்ள  பழங்களை தேர்வு செய்து ஜூஸ் போட்டு தர சொல்லுங்கள் என அறிவுரை கூறிய அதிகாரிகள்,  மாம்பழங்களில் கருப்பு போன்று படிந்து இருக்கும் பழங்களை தயவுசெய்து வாங்காதீர்கள்.இயற்கையாக பழுக்க வைக்கும் பழங்களில் வாசனை நன்றாக இருக்கும். ஆனால் கற்கள் கொண்டு பழுக்க வைக்கும் பழங்களில் மஞ்சள் நிறங்களில் மாறுமே தவிர வாசம் இருக்காது என்று எச்சரிக்கை செய்தனர்.