ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தற்போது இந்தப் படத்தின் மிக முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றை போபாலில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் ஷங்கர். இதற்காக மட்டும் சுமார் ரூ.40 கோடி வரை செலவு செய்யத் தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. பீட்டர் ஹெய்ன் இந்தச் சண்டைக் காட்சியை வடிவமைக்கவுள்ளார்.2021-ல் தான் இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.