டில்லி,
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா தங்களது சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்தவராய் கோஷ், ரோஹின்டன், பாரி நாரிமன் அமர்வு முன், ஆகஸ்டு 2 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நீதிபதி பாலி நாரிமன், ‘இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக ஏற்கனவே தெரிவித்திருந்ததால்’ விசாரணை தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமிதவராய், பாப்டே அமர்வு முன்பு விசாரணக்கு வருகிறது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையிலிருந்து வெளியில் சென்று திரும்பியதற்கான வீடியோ ஆதாரம் நேற்று வெளியாகி இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.