டில்லி:

ஸ்லாமியர்களின் முத்தலாக் விவாகரத்து முறையில் தலையிடப்போவதில்லை என்றும் நாடாளுமன்றம் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி விவகாரத்து செய்யும் நடைமுறையை  இஸ்லாமியர்கள்  பின்பற்றி வருகின்றனர். இஸ்லாமிய சிவில் சட்டங்களின் அடிப்படையில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் முத்தலாக் விவகாரம் பெண்களின் உரிமையை பாதிப்பதாக தெரிவித்தது.

இந்த நிலையில் இஸ்லாமியர்களின் முத்தலாக் விவகாரம், பலதார திருமணம் மற்றும் ‘நிக்காஹ் ஹலாலா’ ஆகிய 3 விவகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனை தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், யு.யு. லலித் மற்றும் அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளை உள்ளடக்கிய `அரசமைப்பு சட்ட அமர்வு’ விசாரணை மேற்கொண்டுள்ளது.

இன்று இந்த அமர்வு, “முத்தலாக் முறையில் நீதிமன்றம்  தலையிட விரும்பவில்லை. இது குறித்து நாடாளுமன்றம் முடிவெடுக்கட்டும்” என்று தீர்ப்பளித்துள்ளது.