சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் ஜெயன், புனிதாராணி, சரண்யா, ஜெசிபி. 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். கடந்த 7ம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் லாட்ஜுக்கு சென்றனர். அங்கு அறை எடுத்து தங்கினார்கள். நேற்று இரவு லாட்ஜ் ஊழியர் அறையின் கதவை தட்டி கூப்பிட்ட போது எந்த சத்தமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை திறந்து பார்த்த போது 4 பேரும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ஜெயன், புனிதாராணி, சரண்யா ஆகிய 3 பேரையும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை ஜெசிபியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஜெயன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். 4 பேரும் எதற்காக வி‌ஷம் குடித்தனர் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.